மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
546 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
546 days ago
தெலுங்கு முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தியில் சாஹித் கபூர் ஜோடியாக 'தேவா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் பாலிவுட் வாரிசு நடிகரான ரோஹன் மெஹ்ரா என்பவருடன் கடந்த சில வருடங்களாக காதலில் விழுந்துள்ளார் என்று செய்தி மட்டும் வெளியானது. ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக எந்த ஒரு புகைப்படமோ, வீடியோவோ இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் ரோஹன் மெஹ்ராவுடன் பூஜா ஹெக்டே ஒரு காரில் ஒன்றாக பயணிப்பது போன்ற ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
நின்று கொண்டிருக்கும் அந்த காரில் இருந்து பூஜா ஹெக்டே இறங்கலாமா வேண்டாமா என்கிற தயக்கத்துடன் அதே சமயம் வெட்கத்துடன் அமர்ந்திருக்க அருகில் ரோஹன் மெஹ்ரா மெதுவாக எட்டிப் பார்த்தபடி அமர்ந்துள்ளார். தூரத்தில் இருந்து ஜூம் செய்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் வினோத் மெஹ்ராவின் மகன்தான் இந்த ரோஹன் மெஹ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
546 days ago
546 days ago