அருண் விஜய்க்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்
ADDED : 888 days ago
நடிகர் அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் நடித்துள்ள 'வணங்கான்' படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அடுத்து, மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது இவரின் 36வது படமாகும். பி. டி. ஜி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் பூஜை நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார். அருண் விஜய்க்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன், சித்தி இதானி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.