உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே நிறுவனத்திற்கு அள்ளி தந்த சிவகார்த்திகேயன்!

ஒரே நிறுவனத்திற்கு அள்ளி தந்த சிவகார்த்திகேயன்!


நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் பேஷன் ஸ்டுடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க இரண்டு படங்கள் கால்ஷீட் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு படம் சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாகிறது மற்றொரு படத்திற்கான இயக்குனர் இன்னும் யாரென்று முடிவாகவில்லை என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !