மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம்
ADDED : 677 days ago
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர் ஜெயராம். தமிழ், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரது மகனான காளிதாஸ் படங்களில் நடித்து வருகிறார். ஜெயராமின் மகளான மாளவிகாவும், லண்டனில் சாட்டர்ட் அக்கவுன்டன்ட்டாக பணியாற்றும் பாலக்காட்டை சேர்ந்த நவ்னீத் கிரீஷ் என்பவரும் காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இருவீட்டார் சம்மதிக்க இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் குருவாயூரில் இவர்களின் திருமணம் இன்று(மே 3) எளிமையாக நடந்தது. இதில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மகள் திருமணம் நடந்த சமயத்தில் மகிழ்ச்சியில் ஜெயராம் ஆனந்த கண்ணீரில் நனைந்தார். இவர்களின் திருமண போட்டோ வைரலாகின.