உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிஷா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள். திரிஷா பிறந்தநாளில் வாழ்த்து சொல்லாத கீர்த்தி சுரேஷ் தாமதமாக வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதுகுறித்து அவர் கூறுகையில், த்ரிஷா பிறந்தநாளன்று கில்லி படம் பார்த்து விட்டு வாழ்த்து சொல்ல நினைத்தேன். ஆனால் அன்றைய தினம் கில்லி படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் அதன் பிறகு ஒரு நாள் கில்லியை பார்த்துவிட்டு இந்த பதிவை போட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதோடு, தான் கில்லி படம் பார்த்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !