தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு
ADDED : 642 days ago
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் நீண்டகால தயாரிப்பாக உருவாகி வரும் படம் 'கங்குவா' . திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
பேண்டஸி கலந்த பிரமாண்ட படமாக உருவாகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து மறுபுறம் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இந்த படத்தை இவ்வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.