மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
498 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
498 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
498 days ago
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் நடித்து வந்த கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கடந்த பல மாதங்களாக சென்னை, கேரளா, ரஷ்யா உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு பிறகு அமெரிக்காவில் கிராபிக்ஸ் பணிகள் தொடங்கின. அங்குள்ள லேஸ் வேகாசில் விஜய் சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் படமாகி வந்தன. இந்நிலையில் அங்குள்ள பணிகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று இரவு விஜய் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார். அடுத்து கோட் படத்திற்கான டப்பிங் பணியில் விஜய் ஈடுபட இருப்பதாக கூறுகிறார்கள்.
498 days ago
498 days ago
498 days ago