மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
454 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
454 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
454 days ago
மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிக் பி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அமல் நீரத். பிரித்விராஜ், மம்தா மோகன்தாஸ் நடிப்பில் வெளியாகி தமிழிலும் வரவேற்பை பெற்ற அன்வர் என்கிற படத்தை இயக்கியதும் இவர்தான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் மம்முட்டியை வைத்து பீஷ்ம பருவம் என்கிற படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் தற்போது போகன் வில்லா என்கிற புதிய படத்தை இயக்குகிறார் அமல் நீரத். இந்த படத்தில் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகியாக ஜோதிர்மயி நடிக்கிறார்.
அதிரடி ஆக் ஷன் படமாக இது உருவாக இருக்கிறது என்பது இந்த படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு முன்னதாக பஹத் பாசில் நடித்த இயோபிந்தே புஸ்தகம் மற்றும் வரதன் ஆகிய படங்களை இயக்கியுள்ள அமல் நீரத் அவர் நடித்த ட்ரான்ஸ் படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
454 days ago
454 days ago
454 days ago