மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
452 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
452 days ago
ஆந்திர மாநில அரசியலில் மாற்றம் வந்தாலும் வந்தது, சிரஞ்சீவி குடும்பத்திலும் மாற்றம் வந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன்தான் அல்லு அர்ஜூன். சிரஞ்சீவி குடும்பத்தில் உள்ள மற்ற வாரிசு நடிகர்களை விடவும் அல்லு அர்ஜூனுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
சிரஞ்சீவியின் சகோதரி விஜயதுர்காவின் மகன் நடிகர் சாய் தரம் தேஜ், தனது மாமாவான பவன் கல்யாண் மீது அதிக பாசம் வைத்துள்ளவர். நடந்து முடிந்த தேர்தலில் பவன் கல்யாண் வெற்றியை அதிகம் கொண்டாடியவர். நேற்று பவன் பதவி ஏற்று முடித்ததும் அவரைக் கட்டித் தழுவி வாழ்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்.
இந்நிலையில் சாய் தரம் தேஜ், தற்போது நடிகர் அல்லு அர்ஜூனை சமூக வலைத்தளங்களில் 'அன்பாலோ' செய்துவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சிரஞ்சீவி குடும்பத்திற்கும், அல்லு அர்ஜூன் குடும்பத்திற்கும் இடையேயான மோதலாக இது பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அல்லு அர்ஜூன் அவரது நண்பரான ஒய்எஸ்ஆர் கட்சியின் நந்தியால் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார். பவன் கல்யாண் தொகுதிக்கு அவர் செல்லவேயில்லை. அப்போதே இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. நேற்று நடந்த பதவியேற்பு விழாவிலும் அர்ஜூன் கலந்து கொள்ளவில்லை. இது அவரின் திரையுலக வாழ்க்கையை எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.
452 days ago
452 days ago