உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சப்தம் படம் எப்போது ரிலீஸ்

சப்தம் படம் எப்போது ரிலீஸ்

ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன், ஆதி கூட்டணியில் உருவாகி வரும் படம் 'சப்தம்'. இதில் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

சப்தத்தை வைத்து வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த படத்தை வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி அன்று திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !