புதுமுகங்களின் 'எமகாதகன்'
ADDED : 610 days ago
அறிமுக இயக்குனர் கிஷன் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எமகாதகன்'. இப்படத்தில் கார்த்திக், மனோஜ், ராஷ்மிதா ஹிவாரி , சதிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரைம் ரீல்ஸ் பிக்சர்ஸ் சார்பாக சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி கண்ணன் தயாரித்துள்ளார். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார். எல்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கிஷன் ராஜ் கூறும்போது “நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது. மதுரை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கிராமபுறங்களில் எதையும், எப்படியாவது சாதித்து முடிப்பவனை எமகாதகன் என்பார்கள். படத்தின் கதையும் அதுதான்” என்றார்.