இரண்டு பாடல்களை படமாக்கிய சூர்யா 44 படக்குழு!
ADDED : 793 days ago
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகின்றார். 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இதில் பூஜா ஹெக்டே, ஜெய்ராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக அந்தமானில் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் இரண்டு பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது .