50வது படம் 'ராயன்' - குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்த தனுஷ்
ADDED : 440 days ago
தனுஷ் நடிக்கும் 50வது படமான 'ராயன்' நாளை மறுநாள் ஜூலை 26ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகி உள்ளது. தான் நடிக்கும் 50வது படத்தை தானே இயக்கியுள்ளார் தனுஷ். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
பட வெளியீட்டை முன்னிட்டு நேற்று தங்களது குலதெய்வக் கோவிலுக்குச் சென்று தனுஷ் வழிபாடு நடத்தியுள்ளார். கோயிலில் அமர்ந்து தியான நிலையில் பிரார்த்தனையும் செய்துள்ளார்.
தேனி அடுத்த ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரம் கிராமத்தில் உள்ள கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோயில் தான் அவர்களது குலதெய்வம். தனுஷின் மகன்கள், அண்ணன் செல்வராகவன், அப்பா இயக்குனர் கஸ்தூரிராஜா, அம்மா, இரண்டு சகோதரிகள் என குடும்பத்தினர் அனைவரும் நேற்று வழிபாடு நடத்தியுள்ளனர்.