உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பான் இந்தியா படமாக ரீமேக் ஆகிறது 'ஆடிவெள்ளி'

பான் இந்தியா படமாக ரீமேக் ஆகிறது 'ஆடிவெள்ளி'

விலங்குகளை வைத்து படம் இயக்கி பிரபலமான ராம நாராயணன் இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான படம் 'ஆடிவெள்ளி'. சீதா, நிழல்கள் ரவி, வாகை சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருந்தனர். யானையொன்றும், பாம்பொன்றும் நடித்தது. படத்தில் யானைக்கு 'வெள்ளிக்கிழமை ராமசாமி' என்று பெயரிட்டிருந்தார்கள். சங்கர்-கணேஷ் இசை அமைப்பில் பாடல்கள் ஹிட்டாகின. மிகப் பெரிய வெற்றி பெற்ற படம். காமெடியும், ஆன்மிகமும் கலந்து உருவான படம்.

இந்த படம் தற்போது பான் இந்தியா படமாக பெரிய பட்ஜெட்டில் ரீமேக் ஆகிறது. ராம.நாராயணன் மகனும், தயாரிப்பாளருமான முரளி என்.ராமசாமியின் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. உலகில் தீயசக்திகள் வீறுகொண்டு எழும்போது, தெய்வீக சக்தி விழித்துக் கொள்கிறது என்ற கருத்துடன் உருவாக்கப்படும் இந்த படத்தை பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி, ரேஞ்சர், ஜாக்சன் துரை 2 படங்களை இயக்கிய பி.வி.பரணிதரன் இயக்குகிறார்.

'ராம.நாராயணன் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்ற அறிவிப்புடன் வெளியாகும் இப்படத்தில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படுகிறது. 'ஜங்கிள் புக்' படத்துக்கு அகாடமி விருது வென்றிருக்கும் சிஜி நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !