நடிகரான ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ்
ADDED : 427 days ago
ரஜினியின் அண்ணனான சத்யநாராயண ராவை முன்பு பல இயக்குனர்கள் நடிப்பதற்கு அழைத்தபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தற்போது மாம்பழத் திருடி என்ற ஒரு படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இது குறித்து அப்படத்தை இயக்கி உள்ள ஏ.ஆர்.ரசீம் கூறுகையில், இந்த படத்தில் நடிக்க சத்யநாராயண ராவை அணுகியபோது முதலில் மறுத்தார். அதையடுத்து ஒரு முறை கதையை மட்டும் கேளுங்கள் என்று இப்படத்தின் கதை சொன்ன போது, நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் பணம் ஏதும் வாங்கவில்லை. அவர்தான் எங்களுக்கு செலவு செய்தார். பெண்களின் பாதுகாப்பு குறித்த கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரஜினியின் அண்ணன் நடித்திருப்பதை கடவுள் கொடுத்த பரிசாகவே கருதுகிறேன் என்கிறார் ஏ.ஆர்.ரசீம்.