மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
393 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
393 days ago
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் காமெடி படம் 'ஸ்வீட்டி நாட்டி'. இதனை அருண் விசுவல்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி.எம்.ஆர்.ரமேஷ் மற்றும் அருண் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜி.ராஜசேகர் இயக்குகிறார். விஜயஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். தங்கமகன், டெவில், கடாவர் போன்ற படங்களில் நடித்த ஆதித் அருண் நாயகனாக நடிக்கிறார். ஸ்ரீ ஜித்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். மற்றும் ரவி மரியா, தெலுங்கு நடிகர் ஆளி, ரகு பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்புகள் நேற்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் கூறும் போது, மூன்று கோணங்களில் நடக்கும் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இந்த படம் உருவாகிறது. படம் பார்க்க வரும் அனைவரும் துவக்கம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அப்படியான வித்தியாசமான காமெடி திரைக்கதை இது.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். ஐதராபாத், கோவை, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதோடு பாடல்களை துபாயில் பல படமாக்க இருக்கிறோம் என்றார்.
393 days ago
393 days ago