ராகவா லாரன்ஸின் 25வது படத்தை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்!
ADDED : 625 days ago
நடன இயக்குனர் ஆக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு இயக்குனர் மற்றும் நடிகராக பிஸியாகி வருகிறார்.
தற்போது நடிகராக ராகவா லாரன்ஸ் 25வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அவரின் திரை பயணத்தில் மைல்கல். இந்த நிலையில் ராகவா லாரன்ஸின் 25வது படத்தை தெலுங்கில் கில்லாடி, வீரா போன்ற படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார் என அறிவித்துள்ளனர். இது பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆக்சன் அட்வென்ச்சர் படம் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.