பவன் கல்யாண் படத்தில் சிம்பு பாடிய பாடல் விரைவில் வெளியீடு
ADDED : 628 days ago
சாஹோ பட இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஓ.ஜி' . பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் ஒரு பாடலை நடிகர் சிம்புவை பாட வைக்க தமன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. இப்போது அது உறுதியாகி உள்ளது. தமன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் சிம்பு உடன் மற்றும் சுஜித் உள்ள போட்டோவுடன் U know it & We call it The #OG Mass RAMPAGE SOON என குறிப்பிட்டு விரைவில் சிம்பு பாடிய இந்த பாடல் வெளியாகும் என மறைமுகமாக குறிபிட்டுள்ளார்.