மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
329 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
329 days ago
எபி அருண் இயக்கத்தில், துருவ் சர்ஜா, வைபவி சாண்டில்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள கன்னடப் படம் 'மார்ட்டின்'. பான் இந்தியா படமாக இப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்கள். கர்நாடகாவில் துருவ் சர்ஜாவுக்கென தனி மார்க்கெட் உண்டு. அதனால், அங்கு இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முதல் நாள் முதல் காட்சி காலை 8 மணிக்கும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 9 மணிக்கும் நடைபெறுவதாக இருந்தது. ஆனாலும் திடீரென எழுந்த சிக்கல் காரணமாக படம் தாமதமாக காலை 10 மணிக்குத்தான் திரையிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்படத்திற்கு பெரிதாக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சென்னையில் கூட பத்துக்கும் குறைவான காட்சிகளே கிடைத்துள்ளன. ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' நேற்று வெளியானதால் அப்படம்தான் தமிழக அளவில் அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளது.
அதே சமயம் பெங்களூருவில் 'வேட்டையன், மார்ட்டின்' ஆகிய இரண்டு படங்களுக்குமே தினமும் சுமார் 500 காட்சிகள் வரை தியேட்டர்கள் கிடைத்துள்ளது.
329 days ago
329 days ago