இரண்டாம் முறையாக இணையும் தசரா கூட்டணி
ADDED : 494 days ago
தெலுங்கில் தசரா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் நானி அவரது 33வது படத்தில் நடிக்கின்றார். இதனை தசரா படத்தினை தயாரித்த ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று விஜயதசமி நன்னாளில் இந்த படத்தை பூஜை நிகழ்ச்சி உடன் அறிவித்தனர். இதற்கு தற்காலிகமாக ' நானி ஒடிலா 2' என தலைப்பு வைத்துள்ளனர். பெரும் பட்ஜெட்டில் இது ஆக்ஷன் படமாக உருவாகிறது என கூறப்படுகிறது.