மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
318 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
318 days ago
பிரபல ஹீரோக்கள் நடித்து பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட்டான படங்கள் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவது தொடர்ந்து வாடிக்கையாகிவிட்டது. தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கூட மணிசித்திரதாழ், ஸ்படிகம், தேவதூதன் உள்ளிட்ட சில படங்கள் இது போன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அந்த வகையில் தற்போது மம்முட்டி நடிப்பில் கடந்த 1986ல் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆவநாழி திரைப்படம் தற்போது 4கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இயக்குனர் ஐ.வி சசி இயக்கிய இந்த படத்தில் கதாநாயகிகளாக கீதா மற்றும் நளினி ஆகியோர் நடித்திருந்தனர். மலையாள திரையுலகில் 20 திரையரங்குகளில் தொடர்ந்து 25 நாட்கள் ஓடிய இந்த திரைப்படம் 100 நாள் வெற்றி படமாகவும் அமைந்தது. போலீஸுக்கும் அரசியல்வாதிக்குமான மோதல் பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 1987ல் தமிழில் நடிகர் கமல்ஹாசன், சந்தான பாரதி இயக்கத்தில் இந்த படத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்கிற பெயரில் தயாரித்தார். இதில் சத்யராஜ் கதாநாயகனாக நடிக்க மலையாளத்தில் நடித்த கீதா மற்றும் நளினி இருவருமே இதிலும் நடித்திருந்தனர். இங்கேயும் இந்தப்படம் வெற்றி பெற்றது.
மேலும் அதே வருடத்தில் தெலுங்கில் கிருஷ்ணம் ராஜு நடிப்பில் டெத் சென்டன்ஸ் என்கிற பெயரிலும் ஹிந்தியில் வினோத் கன்னா நடிப்பில் சத்தியமேவ ஜெயதே என்கிற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
318 days ago
318 days ago