உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 50 கோடி பார்வைகளை கடந்த தமன்னா பாடல்

50 கோடி பார்வைகளை கடந்த தமன்னா பாடல்

தமிழில் ஜெயிலர் படத்தில் காவாலா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார் தமன்னா. அதையடுத்து, ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஸ்திரி 2 என்ற படத்தில் ‛ஆஜ் கி ராத் ராத்' என்ற பாடலுக்கு அதேப்போன்று கவர்ச்சி நடனமாடி இருந்தார். காவாலா போன்று இந்த பாடலிலும் தமன்னாவின் நடன அசைவுகள் பெருவாரியான ரசிகர்களின் ஆதரவை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த பாடலை யு-டியூப்பில் 50 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. அந்த பாடலின் மேக்கிங் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு 50 கோடி வியூஸ் என நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு போட்டுள்ளார் தமன்னா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !