உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அம்பானி குழுமத்தில் இணைந்தார் நயன்தாரா

அம்பானி குழுமத்தில் இணைந்தார் நயன்தாரா


நடிகை நயன்தாரா நடிப்பு தவிர்த்து பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். குறிப்பாக ஒரு டீ விற்பனை செயின் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார். ஒரு நாப்கின் நிறுவனத்திலும் பங்குதாராராக இருக்கிறார். மலேசிய நிறுவனத்துடன் இணைந்து அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தை நயன்தாரா நடத்தி வருகிறார்.

தற்போது முகேஷ் அம்பானி குழுமத்துடன் கைகோர்த்துள்ளார். முகேஷ் அம்பானியின் வாரிசான இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின் மூலம் தனது அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறார். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 'ஜவான்' இந்தி படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது முதல் அவர் இஷா அம்பானியுடன் நட்பு வளர்த்து வருகிறார். அவருடன் இணைந்து மேலும் பல தொழில் நிறுவனங்களை தொடங்கும் எண்ணத்திலும் இருக்கிறார் நயன்தாரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !