குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு
ADDED : 386 days ago
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் அவரது 51வது படமாக 'குபேரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவை வருகின்ற நவம்பர் 15ம் தேதி அன்று வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்த வீடியோவை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.