கஞ்சா விற்பவர்களுடன் தொடர்பா...? - மன்சூர் அலிகான் மகனிடம் போலீசார் விசாரணை
ADDED : 436 days ago
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர் மன்சூர் அலிகான். தற்போது நகைச்சுவை கலந்த குணச்சித்ர வேடங்களில் நடிக்கிறார். இதுதவிர அரசியலிலும் அவ்வப்போது பயணிக்கிறார். இவரது மகன் துக்ளக் அலிகான். மன்சூர் அலிகான் இயக்கி, தயாரித்த கடமான் பாறை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
இந்நிலையில் கஞ்சா வழக்கு தொடர்பாக போலீசார் இவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்தவாரம் சென்னையில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் போனில் துக்ளக் அலிகானின் நம்பரும் இருந்துள்ளது. இதை வைத்து இவர்களுக்குள் என்ன தொடர்பு என துக்ளக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.