மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
273 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
273 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சி 7வது சீசனில் பட்டம் வென்று பிரபலமானவர் அரச்சனா. ராஜா ராணி 2, தேன்மொழி பி.ஏ உள்ளிட்ட சில தொடர்களிலும் நடித்துள்ளார். அருள் நிதியின் 'டிமான்டி காலனி 2ம் பாகம்' படத்தில் நடித்து இருந்தார். அடுத்து டிமாண்டி காலனி 3ம் பாகத்திலும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அருண் பிரசாத்தை அர்ச்சனா காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அருண் பிரசாத்துக்கு அவர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அர்ச்சனா புகார் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. திராவகம் வீசுவதாகவும் மிரட்டுகிறார்கள். இது எல்லை மீறிய செயல். மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசில் அர்ச்சனா புகார் அளித்து இருக்கிறார். புகார் மனுவையும் பகிர்ந்துள்ளார்.
273 days ago
273 days ago