மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
298 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
298 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
298 days ago
இந்த தலைமுறைக்கு தெரிந்த ஆக்ஷன் ஹீரோயின் விஜயசாந்தி. அவர் 1980களில் இருந்தார். இப்போது எல்லா ஹீரோயின்களுமே ஆக்ஷன் ஹீரோயின்கள்தான். விஜயசாந்திக்கு முன்னர் சி.ஐ.டி சகுந்தலா போன்ற ஒரு சிலர் ஆக்ஷன் ஹீரோயின்களாக இருந்தனர். அனைவருக்கும் முன்னோடி கே.டி.ருக்மணி
1939ம் ஆண்டு 'வீர ரமணி' என்கிற ஒரு சினிமா போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது. அதை பார்த்து அன்றைக்கு தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. அதற்கு காரணம் அந்த போஸ்டரில் கே.டி.ருக்மணி ஸ்டைலாக உடை அணிந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். வீர ரமணியை இயக்கியவர் அப்போதைய பாலிவுட் ஆக்ஷன் பட இயக்குனர் அமர்நாத். இந்த படத்தில் பி.எஸ். ஸ்ரீனிவாசராவ் ஹீரோ. இவர்களுடன் பத்மா என்ற கன்னட நடிகை, டி.வி.சாமி, கே.மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கதைப்படி சாந்தா (ருக்மணி), மூர்த்தியை (ஸ்ரீனிவாசராவ்) காதலிப்பார். ஆனால் அவரோ மீனாட்சியை (பத்மா) காதலிப்பார். இந்த நிலையில் வில்லன் டி.வி. சாமி செய்யாத குற்றத்திற்காக மூர்த்தியை சிறைக்கு அனுப்புவார். சிறையில் இருந்து வெளியில் வரும் மூர்த்தி வில்லனாக மாறி அவரும் திருட்டு, கொள்ளைகளில் ஈடுபடுவார். அவருடன் மோதி அவரை திருத்துவார் சாந்தா.
காதலருடன் மோதும்போது அவன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக ஆண் வேடமிட்டு அவருடன் மோதுவார். சிகரெட் புகைப்பார், பயங்கரமாக சண்டை போடுவார். இறுதியில் இருவரும் இணைவதுதான் கதை. ருக்மணியும், ஸ்ரீனிவாசராவும் போடும் சண்டைகள் அன்றைக்கு தியேட்டரையே பதம் பார்த்தது. படம் பெரிய வெற்றி பெற்றது.
298 days ago
298 days ago
298 days ago