மேலும் செய்திகள்
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
272 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
272 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
272 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
272 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வந்தார்கள். ஆனால் அப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கி விட்டது. என்றாலும் அடுத்து விடாமுயற்சி எப்போது ரிலீஸ் ஆகும் என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை.
இந்த நேரத்தில் தற்போது கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதில் விடாமுயற்சி படத்தை குடியரசு தினத்தை முன்னிட்டு ஜன., 23ல் அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருப்பதால் அதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே விடாமுயற்சி படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். என்றாலும் லைகா நிறுவனம் அறிவிக்கும்போதுதான் உண்மையான ரிலீஸ் தேதி தெரியவரும்.
272 days ago
272 days ago
272 days ago
272 days ago