மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
271 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
271 days ago
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரிடம் நடிகர்கள் சிகரெட், குட்கா, குளிர்பானங்கள் போன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஷாருக்கான் கூறியதாவது, குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு மோசமானது என்றால் அதை தடை செய்யுங்கள். சிகரெட், குட்கா மற்றும் குளிர்பானங்கள் மோசமானது என்றால் அதனை இந்தியாவில் உற்பத்தி செய்யாதீர்கள். அதனை விற்பனை செய்வதை நிறுத்துங்கள். உங்களுக்கு வருவாய் தருவதனால் அதனை நிறுத்த மாட்டீர்கள். அவை அரசாங்கத்திற்கு வருமானம் தருகிறது என் வருமானத்தை நிறுத்தாதீர்கள். நான் நடிகன் வேலை செய்வதற்கு எனக்கு வருமானம் வருகிறது. உங்களுக்கு தவறு என்றால் அதனை தடை செய்யுங்கள். அதில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. இந்தியர்கள் நன்றாக படித்தவர்கள் சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை பார்த்து புகைப்பிடிக்கக்கூடாது என்பது மக்களுக்குத் தெரியும். திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் பிரச்னையை விட மிகப்பெரிதாக இருக்கும் சுகாதாரப் பிரச்னையை கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
271 days ago
271 days ago