மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
222 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
222 days ago
ஷங்கர் இயக்கத்தில் நடித்த 'கேம் சேஞ்சர்' படத்தை அடுத்து தற்போது தெலுங்கில் புச்சி பாபு இயக்கும் தனது 16வது படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக இந்த படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியேறி விட்டதாகவும், அவருக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் ஒரு செய்தி வைரலாகி வந்தது.
இந்நிலையில் தற்போது அப்படக்குழு அந்த செய்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. அதில், ராம்சரண் 16வது படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகிவிட்டதாக வெளியாகி உள்ள செய்தி வதந்தியாகும். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்காக இதுவரை மூன்று பாடல்களை கம்போஸ் செய்து கொடுத்துள்ளார். மீதமுள்ள பாடல்களை உருவாக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் என்று சொல்லி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்கள். இப்படத்தில் ராம்சரணுடன் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
222 days ago
222 days ago