மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
202 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
202 days ago
ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017ல் வெளியான படம் 'மரகத நாணயம்'. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் 2வது பாகம் தயாராக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அதன்பின் எந்தவித அப்டேட்டும் வெளிவரவில்லை.
இதற்கிடையே ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கியுள்ள 'சப்தம்' படம் பிப்.,28ல் ரிலீசாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ஆதியிடம் 'மரகத நாணயம் 2' குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''மரகத நாணயம் 2 விரைவில் துவங்க உள்ளோம். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. முதல் பாகத்தில் பணியாற்றியவர்களும் சேர்ந்து பெரிய குழுவினர் இணைந்திருக்கிறார்கள். முதல் பாகத்தின் கதை சிறியதாக இருந்தது, 2ம் பாகத்தின் கதை பெரியதாக இருக்கும். கண்டிப்பாக நல்ல படமாக வரும் என நம்புகிறோம்'' என பதிலளித்தார் ஆதி.
202 days ago
202 days ago