மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா!
ADDED : 271 days ago
நடிகை சமந்தா சமீப காலமாக ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். தியானம் மற்றும் மாற்று சிகிச்சைகளையும் அவர் பின்பற்றுகிறார். நீண்ட காலமாகவே ஈஷா அறக்கட்டளையின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஈஷா யோகா மையத்துக்கு சென்ற சமந்தா, அங்கு மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்துள்ளார். அதாவது, தொலைபேசியில் இருந்து விலகி இருப்பது, யாரிடத்திலும் பேசாமல் தனிமையாக இருப்பது என்று மூன்று நாட்களை தான் கடை பிடித்ததாக இணையப்பக்கத்தில் தெரிவித்திருக்கும் சமந்தா, இது ஒரு பயங்கரமான அனுபவம் என்றும் குறிப்பிட்டுள்ளார். என்றாலும் இது போன்ற மவுன விரதத்தை மீண்டும் நான் முயற்சிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.