உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மாஸ்டர்'ஐ சம்பவம் செய்த 'குட் பேட் அக்லி'

'மாஸ்டர்'ஐ சம்பவம் செய்த 'குட் பேட் அக்லி'

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் நேற்று வெளியானது. அஜித் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'விடாமுயற்சி' படம் அஜித் ரசிகர்களையும் திருப்திபடுத்தாத சூழலில் 'குட் பேட் அக்லி'யைத்தான் அவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

நேற்று வெளியான டீசரில் அஜித்தின் விதவிதமான தோற்றங்கள் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அதனால்தான் அவர்கள் டீசரைத் திரும்பத் திரும்பப் பார்த்து அதன் பார்வைகளை அதிகப்படுத்தி வருகிறார்கள்.

24 மணி நேரம் முடிய இன்னும் 7 மணி நேரம் உள்ள நிலையில் இப்போது 25 மில்லியன் பார்வைகளை அந்த டீசர் கடந்துள்ளது என அறிவித்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த டீசர்களின் 24 மணி நேர சாதனையில் இது புதிய சாதனை.

இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'மாஸ்டர்' டீசர் 24 மணி நேரத்தில் 19.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. 'மாஸ்டரை' சம்பவம் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது 'குட் பேட் அக்லி' டீசர்.

ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது 'குட் பேட் அக்லி'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !