இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன்
ADDED : 252 days ago
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் கார்த்தி, ரவி மோகன் இரண்டு பேரும் நடித்தனர். அப்போதிலிருந்து நெருங்கிய நண்பர்களாகிவிட்ட அவர்கள் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி சென்றுள்ளார்கள். நடிகர் ரவி மோகன் கடந்தாண்டு மலையாள நடிகர் ஜெயராமுடன் இணைந்து சபரிமலைக்கு சென்று இருந்தார். இந்த நிலையில், இந்த ஆண்டு அவரும், கார்த்தியும் இணைந்து சபரிமலைக்கு சென்றுள்ளார்கள். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்கள். அவர்கள் இருவரையும் கொச்சின் விமான நிலையத்தில் மலையாள நடிகர் திலீப் சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.