மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
94 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
94 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
94 days ago
ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் நாகேஷ் பேரன் பிஜேஷ் நடிக்கும் படம் 'வானரன்'. இந்த பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜ முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில் ''ராமன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது நெற்றியில் செந்துாரத்தால் சீதை நாமம் இட்டார், ராமபிரான் மீது அன்பு கொண்ட அனுமன் தனது உடல் முழுவதும் செந்துாரத்தை பூசிக்கொண்டார். ராமரை பற்றி பேசும்போது அனுமன் அங்கே இருப்பதாக சொல்வார்கள். இந்த விழாவிலும் அனுமன் இருப்பார். சென்சிபிள் ஆக படம் எடுக்க கூடாது. சென்ஸ் ஆக எடுக்கணும்.'' என்றார்.
நடிகை கஸ்துாரி பேசுகையில், ''வட இந்தியாவில், தெலுங்கில் வலதுசாரி சிந்தனை படங்கள் வந்து, வெற்றி பெறுகின்றன. தமிழகத்திலும் அந்த நிலை மாறும். தமிழ் சினிமாவில் ஒரு தரப்பு சிந்தனைகளை கேலி செய்கிறார்கள். ஒரு பிரிவினரை மட்டும் அதிகம் விமர்சனம் செய்கிறார்கள். அந்த பிரிவை சேர்ந்த ஆண்கள் என்றால் காமெடியாக சித்தரிக்கிறார்கள், பெண்கள் என்றால் ஒழுக்கம் கெட்டவளாக காண்பிக்கிறார்கள். இது தவறு. இனி பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒருவிலை, சின்ன பட்ஜெட் படங்களுக்கு குறைந்த விலை வைக்க வேண்டும்'' எனப் பேசினார்.
94 days ago
94 days ago
94 days ago