ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை
ADDED : 239 days ago
பவன் கல்யாண் நடித்துள்ள முதல் பான் இந்தியா படம் ஹரிஹர வீரமல்லு. இன்னும் இரண்டு வாரங்களில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தை ஜோதி கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். நிதி அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். சரித்திர படமாக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. சமீபத்தில் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஹரி ஹார வீரமல்லு படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இந்த படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுவது உறுதியாகி இருக்கிறது. மேலும், ஏ.எம்.ரத்தினம் வழங்கும் இந்த படத்தை தியாகர் ராவ் என்பவர் தயாரிக்கிறார். எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.