மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
48 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
48 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
48 days ago
தெலுங்கு திரை உலகில் வில்லன் நடிகராக பிரபலமாகி பின்னர் கதையின் நாயகனாக தொடர்ந்து நடித்து வருபவர் ராணா டகுபதி. அடிப்படையில் இவரது தந்தை தயாரிப்பாளர் என்பதால் இன்னொரு பக்கம் தயாரிப்பு பணிகளையும் கவனித்து வருகிறார். அந்த வகையில் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா திரைப்படத்தை துல்கர் சல்மானுடன் இணைந்து தயாரித்து வருகிறார் ராணா. பீரியட் படமாக உருவாகும் இதை செல்வமணி செல்வராஜ் என்பவர் இயக்குகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ராணா கூறும்போது, “ஒவ்வொரு கதையும் அதற்கான நடிகர்களை ஏதோ ஒரு விதத்தில் தேடிக் கொள்ளும். குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு பலரும் சரியாக இருப்பார்கள் தான் என்றாலும் ஒரு தயாரிப்பாளராக நான் இந்த படத்திற்கு சரியான நடிகராக தேடிய போது துல்கர் சல்மானை தவிர என்னால் வேறு யாரையும் நினைத்துப் முடியவில்லை. ஒருவேளை அவர் இந்த படத்திற்கு கிடைத்திருக்காவிட்டால் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டேன். அந்த அளவுக்கு துல்கர் சல்மான், தான் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு அழகியலான சினிமாவை ரசிகர்களிடம் கொண்டு செல்கிறார் என்றே நினைக்கிறேன்” என்று பாராட்டியுள்ளார்.
48 days ago
48 days ago
48 days ago