மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
62 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
62 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
62 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
62 days ago
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் மதராஸி. அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் ஜூலை இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சற்று தாமதமாகி தற்போது சலம்பல என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை சாய் அபயங்கர் பாடியுள்ளார்.
சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் படத்தின் பாடல் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதோடு, அதிரடியான பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது ஒரு பிரேக்-அப் பாடலாக அமைந்திருக்கிறது. என்றாலும் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடனமாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தில் இடம் பெற்ற பிரேக்-அப் பாடலை போலவே இந்த பாடலும் இருப்பதோடு, ரெமோ படத்தில் இடம்பெற்ற டாவுயா பாடல் எடுக்கப்பட்ட அதே சென்னை மவுண்ட் ரோடு லொகேஷனில் இந்த சலம்பல பாடலையும் எடுத்திருப்பதால் அந்த பாடலை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக சோசியல் மீடியாவில் பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
62 days ago
62 days ago
62 days ago
62 days ago