மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
54 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
54 days ago
விக்ரம் பிரபு நடிக்கும் சிறை படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. இதை கூலி பட வேலைகளில் பிசியாக இரு்தாலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். காரணம் படத்தை தயாரிப்பது விஜயை வைத்து மாஸ்டர், லியோ மற்றும் மகான், காத்துவாக்குல இரண்டு காதல் போன்ற படங்ளை தயாரித்த எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே.அக்ஷய் குமார் இதில் 2வது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
டாணாக்காரன் தமிழ் கதை எழுத, சுரேஷ்ராஜகுமாரி படத்தை இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். அனந்தா, அனிஷ்மா ஹீரோயின்கள். தலைப்புக்கு ஏற்ப, சிறை பின்னணியில் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சிறை என்ற பெயரில் 1984ல் படம் வந்துள்ளது. அதில் ராஜேஷ், லட்சுமி நடித்தனர். லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு அந்த சிறை படம் உருவாகி இருந்தது. அதற்கும் இந்த சிறைக்கும் சம்பந்தம் இல்லை.
54 days ago
54 days ago