மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
46 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
46 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
46 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
46 days ago
தெலுங்கு சினிமாவில் புதிது புதிதாக இளம் நடிகர்கள் வந்தாலும் இன்றும் மாஸ் குறையாத சீனியர் நடிகராக தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் பாலகிருஷ்ணா. படங்களில் இவரது அதிரடியான சண்டைக் காட்சிகளும் வசனங்களும் தெலுங்கையும் தாண்டி இவருக்கு ரசிகர்களை பெற்று தந்துள்ளன. அதுமட்டுமல்ல கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் ஆந்திராவில் உள்ள ஹிந்துப்பூர் தொகுதியில் எம்எல்ஏ.,வாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பாலகிருஷ்ணா.
இந்த நிலையில் சமீபத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொகுதியில் பஸ் போக்குவரத்தில் பெண்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார் பாலகிருஷ்ணா. வெறுமனே கொடியசைத்து திட்டத்தை துவக்கி வைக்காமல் பேருந்திலேயே ஏறி ஓட்டுனராக மாறி அரசு பேருந்தை சிறிது தூரம் இயக்கியும் காட்டினார் பாலகிருஷ்ணா. கூடியிருந்த பொதுமக்களும் அவரது ரசிகர்களும் அவர் பேருந்து ஓட்டுவதை பார்த்து உற்சாக குரல் எழுப்பினார்கள். மக்களும் ரசிகர்களும் பாராட்டினாலும் கூட ஒருவேளை பாலகிருஷ்ணா இப்படி அரசு பேருந்து ஓட்டியது தவறான செயல் என்று கூட யாரேனும் வழக்கு தொடரவும் வாய்ப்பு இருக்கிறது.
46 days ago
46 days ago
46 days ago
46 days ago