வாசகர்கள் கருத்துகள் (1)
நூறு சதவீதம் விஜயிஸமா? ரொம்ப சுமாரா இருக்குமே? பாக்க முடியாதே?
இயக்குனர் வினோத் டைரக்ஷனில் நடிகர் விஜய் நடித்து வரும் ‛ஜனநாயகன்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. விஜய் அரசியலில் குதித்து விட்டதால் அவரது கடைசி படமாக இதை அறிவித்துள்ளார். அதனால் இந்த படம் அவரது அரசியல் நுழைவுக்கு அடித்தளம் போடும் விதமாகவும் அதேசமயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதமாகவும் உருவாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றி வரும் பிரதீப் இ ராகவ், இந்தப் படம் 100 சதவீதம் விஜய்யிசமாக உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் இது குறித்து அவர் கூறும்போது, “ஜனநாயகன் படம் பற்றி இது தவிர வேறு எதையுமே நான் இப்போது சொல்ல முடியாது. அப்படி சொன்னால் ஒருவேளை என்னை படத்திலிருந்தே தூக்கி வீசி விடுவார்கள். ஆனால் படத்தில் என்ஜாய் பண்ணுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். படம் மிக நன்றாக வந்திருக்கிறது. 100 சதவீதம் விஜய்யிசமாக உருவாகி இருக்கிறது என்று மட்டும் சொல்வேன்” என்று கூறியுள்ளார்.
நூறு சதவீதம் விஜயிஸமா? ரொம்ப சுமாரா இருக்குமே? பாக்க முடியாதே?