கமலின் அடுத்த படங்களின் இயக்குனர் பட்டியலில் இவரா?
ADDED : 167 days ago
சித்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் 'வீர தீர சூரன் 2'. இந்தப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது. வீர தீர சூரன் 2 படத்தின் முந்தைய பாக கதையும் படமாக வேண்டி உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் படம் இயக்க அருண் குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அன்பு அறிவு இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார். இதற்கு அடுத்த படமாக அருண் குமார் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளாரா அல்லது கமல் தயாரிக்கும் ஒரு படத்தை இவர் இயக்குகிறாரா என்பது விரைவில் தெரியவரும். அனேகமாக கமல் தயாரிக்கும் படத்தையே இவர் இயக்குவார் என கூறப்படுகிறது.