மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
3 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
3 days ago
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
3 days ago
'தி கோட்', 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார் மீனாட்சி சவுத்ரி. ஹிந்தியில் போர்ஸ் 1, 2 ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது போர்ஸ் 3ம் பாகம் உருவாகிறது. இந்த பாகத்தை பாவ் துலியா இயக்குகிறார். போர்ஸ் முந்தைய பாகங்களில் நடித்த ஜான் ஆப்ரஹாம் இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார். ஆனால், முந்தைய பாகங்களில் கதாநாயகியாக நடித்த ஜெனிலியா, சோனாக்சி சின்ஹா இல்லாமல் இதில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் இதற்கான டெஸ்ட் ஷூட் நடத்தியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற நவம்பர் மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
3 days ago
3 days ago
3 days ago