நடிகை வைஜெயந்தி மாலா நலம் : மகன் தகவல்
ADDED : 144 days ago
தமிழ், ஹிந்தியில் 1950 - 60களில் கொடி கட்டி பறந்தவர் வைஜெயந்திமாலா. தமிழில் வாழ்க்கை, வஞ்சிக்கோட்டை வாலிபன், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். 92 வயதான வைஜெயந்திமாலா சென்னையில் வசிக்கிறார். இவர் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்தி பரவுவது வழக்கம். அந்த வகையில் மீண்டும் வதந்தி பரவியுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் வைஜெயந்தி மாலா நலமுடன் உள்ளார் என்று அவர் மகன் விளக்கம் அளித்துள்ளார். நடிகையாக மட்டுமல்ல அரசியல்வாதியாகவும் தென்சென்னை எம்பி ஆகவும் அவர் இருந்துள்ளார். இவர் பத்ம விபூஷண் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.