மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
3 minutes ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
3 minutes ago
2020ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நடித்தார் நயன்தாரா. அப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த பான் இந்தியா படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா, இனியா, யோகி பாபு, சிங்கம் புலி மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுப்பற்றி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறுகையில், ''மூக்குத்தி அம்மன் ஒரு படம் மட்டும் அல்ல, மக்களை உணர்வுரீதியாக கவர்ந்த படைப்பு. பக்தி, மர்மம், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து, ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தைத் தர வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் பிரம்மாண்ட உருவாக்கத்தின் ஒரு சிறு துளி தான் இந்த பர்ஸ்ட் லுக்'' என்றார்.
தெய்வீகமும் மாயமும் நிறைந்த பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. வரும் கோடை கால விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
3 minutes ago
3 minutes ago