உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது

'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது


தெலுங்கு திரையுலகில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை ஸ்ரீ லீலா. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்து அங்கே இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று பாபி தியோல் நடிக்கும் ராணுவ பின்னணி கொண்ட ஆக்சன் படம். இன்னொன்று அனுராக் பாஸ் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக நடிக்கும் படம்.

இதில் பாபி தியோல் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் 'ஏஜென்ட் மிர்ச்சி' என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்த அவரது கதாபாத்திர போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்கள் இவரது இந்த கெட்டப்பை பார்த்துவிட்டு சிண்ட்ரெல்லாவாக நடித்தவர் லேடி ஜேம்ஸ்பாண்ட் ஆக மாறி விட்டார் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். இதற்கு முதல் நாள் தான் பாபி தியோலின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !