உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...?

நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...?

மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், சங்கத்தமிழன், திமிருபிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்து வந்தவர் அதன்பின் கார் ரேஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பி அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ரஜித் இப்ரானை காதலித்தார் நிவேதா. கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாவில் ரஜித் உடன் இருந்த போட்டோக்களை நீக்கி உள்ளார் நிவேதா. அதேப்போல் ரஜித்தும் நிவேதா உடனான போட்டோக்களை நீக்கி உள்ளார். இருவரும் இன்ஸ்டாவில் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்துள்ளனர். இதன்மூலம் இருவரும் பிரிந்துவிட்டதாகவும், திருமணம் நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !