வாசகர்கள் கருத்துகள் (2)
1 யூரோ ரூ 105 டிக்கெட் யூரோ 10-15 ஆக ஒரு டிக்கெட் ரூ 1500 விற்றது ரூ 5 லட்சம். ரூ 5,00,000/(1500) = 346 டிக்கெட். இதுக்கு டப்பா
டூப்ளிகேட் புக்கிங்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கடைசி படம் 'ஜனநாயகன்'. இப்படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. அந்த வகையில் இப்படம் திரைக்கு வர இன்னும் 25 நாட்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது சில வெளிநாடுகளில் 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது.
அதில், ஜெர்மனியில் இப்படம் சில தினங்களில் 5.5 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் சில வெளிநாடுகளில் விறுவிறுப்பான டிக்கெட் முன்பதிவு நடப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும், இப்படத்தின் 'தளபதி கச்சேரி' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கவுதம் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
1 யூரோ ரூ 105 டிக்கெட் யூரோ 10-15 ஆக ஒரு டிக்கெட் ரூ 1500 விற்றது ரூ 5 லட்சம். ரூ 5,00,000/(1500) = 346 டிக்கெட். இதுக்கு டப்பா
டூப்ளிகேட் புக்கிங்