உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா?

புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா?

அஜித் குமார் மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவரை வைத்து ஒரு விளம்பர படத்தை இயக்க சிவாவும், அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான ஆவணப்படத்தை இயக்க ஏ.எல்.விஜய்யும் அங்கு முகாமிட்டுள்ளார்கள். இந்தநேரத்தில், குட் பேட் அக்லி படத்தை அடுத்து அஜித்தின் 64 -வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரனும் மலேசியா சென்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் கதை குறித்த சில விஷயங்களை அஜித் இடத்தில் பகிர்ந்து கொள்ளவும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆங்கில புத்தாண்டு தினத்தில் வெளியிடலாமா என்பதை கலந்து பேசி முடிவெடுக்கவும் அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தில் நடிகர் சிம்புவும் மலேசியாவுக்கு ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது அஜித்தை சந்தித்த நிலையில், அஜித் 64வது படத்தில் நடிக்கும் ஸ்ரீ லீலாவும் நேற்றைய தினம் மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !