நானியா... சூர்யாவா... : மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த்
தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டில் திரைக்கு வந்த ‛டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். இந்த படத்திற்கு பிறகு அவர் அடுத்து என்ன படம் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த போது அவர், ‛வித் லவ்' எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 6ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
இதையொட்டி அபிஷன் ஜீவிந்த் அளித்த பேட்டியில் அவரிடம் உங்களின் அடுத்த படத்தில் நாயகனாக சூர்யா அல்லது நானி நடிக்கின்றாரா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, சூர்யா சார், நானி சாரை சந்திதது எல்லாம் உண்மை தான். ஆனால், அவர்களுக்கான கதை என்னிடம் இல்லை. அதேசமயம் என் அடுத்த படம் பெரிய பட்ஜெட்டில் ஆக் ஷன், எமொஷனல், காமெடி படமாக உருவாகிறது. எனது மூன்றாவது படமாக ஒரு பிரமாண்டமான சயின்ஸ், பிக் ஷன் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.